Skip to main content

சனிப்பெயர்ச்சி

அன்புள்ள சனீசுவரனார்க்கு... 

எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

ஜனவரி 17 அன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம். 

புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல. 

உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள். 

உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள். 

புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள். 

நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள். 

இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். 

அப்படியெல்லாம் செய்யாதீர்கள். 

ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள். 

வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள். 

அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம். 

அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது ? 
பிள்ளைகுட்டிகள் எல்லாம் பயப்படுகின்றன. 

உங்களுக்கே தெரியும்... இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு. 

பிழைப்புக்கொரு வேலை பார்த்து, பிடித்தம்போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து, விலைவாசியால் கொண்டாயத்தில் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று, பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி, பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும்குறையுமாய் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம். 

இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மியடித்துவிடாதீர். வலி தாங்க முடியாது.


உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும். 

எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா ? 

எங்களைப் பார்த்தால் ”இரண்டு வீக்கு வீக்குவோம்” என்றா உமக்குத் தோன்றுகிறது ? 

ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறியிறங்கியதுபோலத்தானே இருக்கிறோம் ? வடிவேலைப்போல “ஔ” என்று அழுதபடிதானே தலைக்குத் துண்டைப் போட்டு உட்கார்ந்திருக்கிறோம் ?   

இதற்கும் மேலுமா எங்களை போட்டுத் துவட்டுவதற்குத் துணிவீர்கள் ? 

போதும் போதும்... கொஞ்சம் கருணை காட்டுங்கள். 

வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து, ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக. 

வழக்கம்போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக. 

இங்ஙனம்........
சனிப்பெயர்ச்சியால் பாதிப்படையும் இராசிக்காரர்கள். 😁😁😁

Comments

Popular posts from this blog

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள். 👉வேப்பமரம். 15' × 15' 👉பனைமரம். 10' × 10' 👉தேக்கு மரம். 10' × 10' 👉மலைவேம்பு மரம். 10' × 10' 👉சந்தன மரம். 15' × 15' 👉வாழை மரம். 8' × 8' 👉தென்னை மரம். 24' × 24' 👉பப்பாளி மரம். 7' × 7' 👉மாமரம் உயர் ரகம். 30' × 30' 👉மாமரம் சிறிய ரகம். 15' × 15' 👉பலா மரம். 22' × 22' 👉கொய்யா மரம்‌. 14' × 14' 👉மாதுளை மரம். 9' × 9' 👉சப்போட்டா மரம். 24' × 24' 👉முந்திரிகை மரம். 14' × 14' 👉முருங்கை மரம். 12' × 12' 👉நாவல் மரம். 30' × 30' இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.  தென்னைக்கு தேரோட.. வாழைக்கு வண்டியோட... கரும்புக்கு ஏரோட.... நெல்லுக்கு நண்டோட.....! என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள். #இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்! இவ்வாறு இடைவெளி இருந்த...

வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா ?

*வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா* ? வெந்தயக் கீரை நம்மை விட வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா , கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தை குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடூவதால் சீரண சக்தியை அதிகரிக்கும். . பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.காசநோய் கூட குணமாகும். பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில்நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். உடலுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்கும் உணவாக வெந்தயக் கீரை இருக்கிறது. இது சற்று கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை பலரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் கேட்டால் உங்கள் உணவில் க...