#தேங்காயை உடைத்த பின்புதான் அதன் குடுமியை உரிப்பது எதற்காக..? #சில பழக்க வழக்கங்கள் ஏன் எதற்கு என்று தெரியாது ஆனால் கண்டிப்பாக கடைபிடித்துவருவோம். #இயற்கையோடு ஒத்து வாழ்ந்து அதனை மதித்து வாழ்வது நம் மக்களின் பெருமை. #இயற்கை எல்லா விதத்திலும் ஆச்சர்யத்தை மறைத்து வைத்துள்ளது. #ஓர் அறிவு ஜீவன்களான தாவரங்கள் கூட தன் இனப்பெருக்கத்தை உறுதி செய்ய சூழ்நிலையை உறுதி செய்து முளைவிட்டு செழிக்கும்படியான விதைகளை உற்பத்தி செய்து பரப்புகிறது. #ஒவ்வொரு விதையும் முற்றியபின் தன் தாயிடம் இருந்து முடிந்தவரை தள்ளிச் சென்று வேறூன்றி தழைத்துச் சந்ததியைப் பெருக்கத் தேவையான அனைத்து தகவமைப்புகளையும் கொண்டுள்ளது #விதைகள் ரோமங்களில் ஒட்டிக்கொள்வது, வெடித்துச் சிதறுவது, காற்றில் பரப்பது, பறவைகளுக்கு உணவாவது. தண்ணீரில் மிதந்து செல்வது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. #அந்த விதத்தில் தென்னை நீர்நிலையைச் சார்ந்த தாவரம் என்பதால் முற்றிய தேங்காய் நீரில் மிதந்து வெகுதூரம் செல்லத்தக்கது. குறைந்தபட்சம் தென்னைமட்டை தூரமாவது தாய் மரத்தை விட்டு விலகிச் சென்று விழும்படியான அமைப்பைக் கொண்டது. ...