Skip to main content

வேப்பமரத்தின் அதிசியங்கள்*

*வேப்பமரத்தின் அதிசியங்கள்*

வேப்பமரத்தின் மிரளவைக்கும் அதிசயங்கள்

வேப்பமரத்தின் பல்வேறு பயன்களை , அதன் சக்திகளை , மகிமைகளை, அறிந்து பயன்படுத்தி , அனுபவங்களை உணர்ந்து , வைத்திருந்த நம்முடைய முன்னோர்கள்,
வேப்ப மரத்தின் பலன்கள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் , ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப மரத்தை வளர்த்து அதன் பயனை அனைவரும் பெறும் படி பல்வேறு முறைகளை வகுத்து வைத்து வந்திருக்கின்றனர் .
அதன் பலனை உணர்ந்தும் உணராமலும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வேப்பமரத்தை வளர்த்து வந்து இருக்கின்றனர்.

தற்காலத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் கூட வேப்ப மரத்தின் பயனை உணர்ந்தும் , உணராமலும் – அறிந்தும் , அறியாமலும் கிராமப் பகுதிகளில் வீட்டின் முன் பக்கத்திலோ அல்லது பின் பக்கத்திலோ வேப்ப மரத்தை வளர்த்து வருகின்றனர் . வேப்ப மரம் வளர்க்கப் பட்டு வருவதைக் காணலாம் .
வேப்பமரம் நமது தேசத்தில் தான் எங்கும் காணப்படுகிறது. இமயம் முதல் குமரிவரை இந்த வேப்பமரத்தைக் காணலாம் .
ஆனால் மேல் நாடுகளிலும் , கீழ்நாடுகளிலும் வேப்பமரம் அவ்வளவாகச் செழித்து வளர்வதில்லை . செழித்து வளர்வதற்கு உரிய காலநிலை அங்கே காணப்படுவதில்லை .
பாகங்கள்: ஆலமரம் , அரசமரம் போன்ற வியக்கத்தக்க மரவகைகள் உள்ள நிலையில் வேப்ப மரம் மட்டும் முக்கிய இடம் வகிப்பதற்குக் காரணம் அதனிடமுள்ள மருந்துக் குணமேயாகும் .
உச்சி முதல் அடி வரை அதாவது நுனிவேர் வரை முழுவதும் மருந்துக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வேப்ப மரம் . பேய் பிசாசுகளை ஓட்டும் மந்திரவாதிகளுக்கும் , விஷக்கடிகளின் விஷத்தைப் போக்கும் மருத்துவர்களுக்கும் , வேப்ப இலை பயன்படுகிறது .
வேப்ப மரத்தின் இலை , பூ , காய் , பழம், கொட்டை , பருப்பு , எண்ணெய் பட்டை , கட்டை என்ற எல்லா விதமான பாகங்களுமே வைத்திய முறைக்கு நன்கு பயன் பட்டு வருகிறது .
பார்வை -சுவாசம்: பச்சைப் பசேல் என்று இருக்கும் வேப்பமரத்தைத் தினசரி எழுந்தவுடன் கண் குளிரப் பார்த்து அதன் காற்றைச் சுவாசித்து வருபவர்களுக்கு , கண் சம்பந்தமான நோய்களும் ,சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோய்களும் வருவதில்லை .
சுவாச உறுப்புகள் சுத்தமடையும் . கண் பார்வை தெளிவடையும் .
கண் பார்வை குறைந்தவர்கள் பசுமையான வேப்ப மரத்தைத் தினசரி 40 நாட்கள் வரை காலையிலும் ,மாலையிலும் அரை மணி நேரம் பார்த்து வருவார்களானால் அவர்கள் பார்வை தெளிவடையும் .
சர்வரோக நிவாரணி : இத்தகைய சிறப்பு வாய்ந்த வேப்பமரத்தைப் புகழ்ந்து ஒரே வார்த்தைகளில் கூற வேண்டுமானால் , இதை ஓர் சர்வரோக நிவாரணி எனலாம் .
சர்வம் என்றால் அனைத்தும் என்று பொருள் . ரோகம் என்றால் நோய் என்று பொருள் . நிவாரணி என்றால் தீர்க்கக் கூடியது என்று பொருள் . சர்வரோக நிவாரணி என்றால் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கக் கூடியது என்று பொருள் .
தொற்று நோய்: மூலிகை வர்க்கங்களிலேயே அனைத்து வகை நோய்களையும் தீர்க்கக் கூடிய சக்திவாய்ந்த ஒரு மூலிகை உண்டென்றால் அது வேப்ப மரமாகத்தான் இருக்கும் .

*வேப்ப மரத்தைத் தெய்வமாக எண்ணி அதை வழிபட்டு வரும் பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் இன்றளவும் இருந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் அம்மரத்தினிடமுள்ள நோய் தீர்க்கும் சக்தியே ஆகும் பொதுவாக வேப்பமரம் இருக்கும் இடத்தில் எந்தவிதமான தொற்று நோயும் வருவதில்லை*

கிராமங்களில் அமைந்த வீடுகளின் முன்பக்கம் வேப்பமரமும் , பின்பக்கம் முருங்கை மரமும் இருப்பதைக் காணலாம் . வேப்பிலையை வீட்டைச் சுற்றிலும் வீட்டு வாசலின் முன் பக்கமும் ,வீட்டின் பின்புறத்திலும் வைத்து இருந்தால் , வீட்டைச் சுற்றிலும் வைத்து இருந்தால் , அந்த வீட்டினுள் எந்தவிதமான தொத்துநோயும் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை . தொத்து நோய் வருவதற்கான எந்தவிதமான காரணங்களும் அறிகுறிகளும் இருக்காது.
மந்திரவாதி: சிலர் தங்களுக்கோ , தங்கள் குழந்தைகளுக்கோ உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரைத் தேடமாட்டார்கள் .மந்திரவாதியைத்தான் தேடுவார்கள் . மந்திரவாதியிடம் சக்தி இருக்கிறதோ , இல்லையோ ஆனால் அவர் கையிலிருக்கும் வேப்பிலைக் கொத்துக்கு மட்டும் நோய் தீர்க்கும் சக்தி உண்டு .
வேப்பிலையிலிருக்கும் ஒருவித மருத்துவ குணம் கொண்ட சக்தி அந்த இலையை வீசும் பொழுது வெளிப்படும் . இந்தச் சக்தி எந்த வியாதியையும் குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் மந்திரவாதி மந்திரித்த பின் வியாதி குணமாகிறது .
மனது: மனதிற்கும் வேப்பமரத்தில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் நெருங்கிய அதிகமான பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு . வேப்பமரத்தின் அடியில் காலை , மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் உட்கார்ந்து கொண்டே வந்தால் மனம் சாந்த நிலையை அடையும். மனதில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும் . மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகும் . மனதில் ஒரு தெம்பு உண்டாகும் .

Comments

Popular posts from this blog

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள். 👉வேப்பமரம். 15' × 15' 👉பனைமரம். 10' × 10' 👉தேக்கு மரம். 10' × 10' 👉மலைவேம்பு மரம். 10' × 10' 👉சந்தன மரம். 15' × 15' 👉வாழை மரம். 8' × 8' 👉தென்னை மரம். 24' × 24' 👉பப்பாளி மரம். 7' × 7' 👉மாமரம் உயர் ரகம். 30' × 30' 👉மாமரம் சிறிய ரகம். 15' × 15' 👉பலா மரம். 22' × 22' 👉கொய்யா மரம்‌. 14' × 14' 👉மாதுளை மரம். 9' × 9' 👉சப்போட்டா மரம். 24' × 24' 👉முந்திரிகை மரம். 14' × 14' 👉முருங்கை மரம். 12' × 12' 👉நாவல் மரம். 30' × 30' இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.  தென்னைக்கு தேரோட.. வாழைக்கு வண்டியோட... கரும்புக்கு ஏரோட.... நெல்லுக்கு நண்டோட.....! என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள். #இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்! இவ்வாறு இடைவெளி இருந்த...

சனிப்பெயர்ச்சி

அன்புள்ள சனீசுவரனார்க்கு...  எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஜனவரி 17 அன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.  புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.  உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.  உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.  புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.  நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.  இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.  அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.  ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.  வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.  அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்...

வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா ?

*வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா* ? வெந்தயக் கீரை நம்மை விட வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா , கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தை குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடூவதால் சீரண சக்தியை அதிகரிக்கும். . பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.காசநோய் கூட குணமாகும். பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில்நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். உடலுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்கும் உணவாக வெந்தயக் கீரை இருக்கிறது. இது சற்று கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை பலரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் கேட்டால் உங்கள் உணவில் க...