சித்த மருத்துவத்தில் இன்று
🌺 *அரசு:-*
சமூகத்தில் உயர்ந்த மனிதர்தான், அரசனாக இருப்பார்.
இது மரங்களில் உயர்ந்த இடத்தை வகிப்பதால், அரசனை போல மக்கள் நினைப்பதால் *"அரசு"* என்று பெயர்
1}அஸ்வத்தம்,அச்சுவத்தம்-- அஸ்வம்--என்றால் குதிரை என்று பொருள், ஆண்மையை "குதிரைக்கு" ஒப்பாக சொல்லுவர்.இதன் இலைக்கொழுந்து மற்றும் விதைத்தூள்-----சுக்கில நட்டத்தை போக்கி "ஆண்மை பெருக்கியாக" இருப்பதால், இதற்கு "அஸ்வத்தம்" என்று பெயர்
2}திருமரம்:-
"திரு" என்பதற்கு மதிப்புமிக்க என்று பொருள்.
கோயில்களில், தெய்வமாக இந்த மரம் வளர்க்கப்பட்டு,வணங்கப்படுவதால்"திருமரம்"
3}பணை:-
இதற்கு,உயர்ந்த,பருமனான என்று பொருள்.
அரச மரம்--உயர்ந்து பருமனாக வளர்வதால் "பணை" என்று பெயர்.
4}கணவம்:-
கணவம்,கணவன்---அரச மரம்,ஆண்தன்மை கொண்ட மரம்.விந்துவை பெருக்கும் குணம் உடையதால், இதற்கு "கணவம்" என்று பெயர்.
5}பேதி:-
இதன் விதைத்தூள்--மலச்சிக்கலை போக்குவதால் "பேதி" என்று பெயர்
6}சுவலை:-
வீரியமிக்க "ஆண்தன்மை" கொண்ட மரமாக இருப்பதால் "சுவலை" என்று பெயர்.
சுவல்--என்பதற்கு முதுகு என்று பொருள்,முதுகை போன்று விரிந்து வளர்வதால் "சுவலை" என்று பெயர்
சித்த மருத்துவர்
சண்முகசுந்தரம் பெருந்துறை 9842191936
Comments
Post a Comment