*வேப்பமரத்தின் அதிசியங்கள்* வேப்பமரத்தின் மிரளவைக்கும் அதிசயங்கள் வேப்பமரத்தின் பல்வேறு பயன்களை , அதன் சக்திகளை , மகிமைகளை, அறிந்து பயன்படுத்தி , அனுபவங்களை உணர்ந்து , வைத்திருந்த நம்முடைய முன்னோர்கள், வேப்ப மரத்தின் பலன்கள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் , ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப மரத்தை வளர்த்து அதன் பயனை அனைவரும் பெறும் படி பல்வேறு முறைகளை வகுத்து வைத்து வந்திருக்கின்றனர் . அதன் பலனை உணர்ந்தும் உணராமலும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வேப்பமரத்தை வளர்த்து வந்து இருக்கின்றனர். தற்காலத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் கூட வேப்ப மரத்தின் பயனை உணர்ந்தும் , உணராமலும் – அறிந்தும் , அறியாமலும் கிராமப் பகுதிகளில் வீட்டின் முன் பக்கத்திலோ அல்லது பின் பக்கத்திலோ வேப்ப மரத்தை வளர்த்து வருகின்றனர் . வேப்ப மரம் வளர்க்கப் பட்டு வருவதைக் காணலாம் . வேப்பமரம் நமது தேசத்தில் தான் எங்கும் காணப்படுகிறது. இமயம் முதல் குமரிவரை இந்த வேப்பமரத்தைக் காணலாம் . ஆனால் மேல் நாடுகளிலும் , கீழ்நாடுகளிலும் வேப்பமரம் அவ்வளவாகச் செழித்து வளர்வதில்லை . செழித்து வள...