புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் நம்மிடம் கேட்கும் கேள்வி இது. *வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?"*
புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் நம்மிடம் கேட்கும் கேள்வி இது.
*வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?"* என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்!
*அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம்*👇👇
*புங்கன் மரம்*
(Pongamia binnata)
*ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம் நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது.
காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது.
இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது.
இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம்.
*மகிழம் மரம்*
(Mimusops elengi)
மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும்.
இம்மரம் பயணக் களைப்பை போக்கும் சுகமான காற்றைத் தரும். இம்மரத்தின் பூ,பட்டை,இலை,விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் உடையது.
இதன் பூக்களில் இருந்து நறுமணம் மிக்க எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது.
*வகுளம்* என்று மற்றொரு பெயரில் அழைக்கப்படும் இம்மரம் திருவண்ணாமலை,திருக்கண்ணங்குடி,திருக்கண்ணமங்கை உள்ளிட்ட 10 திருக்கோயில்களுக்கு தலவிருட்சமாக இருக்கிறது.இந்த மரத்தை சுவரில் இருந்து மூன்று அடியில் வைக்கலாம்
*வாதாம் மரம்*
(Terminalia catapa)
இது வாதுமை, வாதாம் பருப்பு அல்லது வாதாங்கொட்டை பெறப்படும் மரம் ஆகும். வாதாம் பருப்பை வாதுமை எனவும் கூறுவர். வாதுமை கொட்டைகளை வலாங்கொட்டை எனவும் கூறுவர்.ஆனால் பாதாம் பருப்பு வேறு வாதாம் வேறு.
இம்மரம் நன்கு பறந்து விரிந்து வளர்ந்து நிழல் தரக்கூடிய மரம்.இம்மரத்தின் பழங்களின் மேல் உள்ள சதைப்பகுதியை வௌவால் விரும்பி உண்ணும்.
ஆனால் கடினத்தன்மையற்ற இம்மரம் பலமான காற்றில் எளிதில் சாய்ந்து விடும்.
இது அழகு மரமாக(Ornamental) வளர்க்கப்படுகிறது.
*டப்பாக்காய் மரம்* என்று மற்றொரு பெயரில் அழைக்கப்படும் இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நட்டு வளர்க்கலாம்.
*வேம்பு*
(Azadirachta indica)
இம்மரம் மக்கள் விரும்பி வீட்டு வாசலில் வளர்க்கும் மரங்களில் முக்கியமான மரமாகும்.இம்மரத்தின் இலை,பூ,காய்,பட்டை,வேர் என எல்லா பாகங்களும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது.
நம் முன்னோர்கள். வேம்பின் காற்றை சுவாசித்தாலே நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் என நம்பினர்.
வேம்பு, வறட்சி, புயல் உள்ளிட்ட இயற்கை இடர்ப்பாடுகளிலும் தாக்குப்பிடித்து வளரக்கூடிய தன்மை வாய்ந்த மரமாகும்.
இம்மரத்தின் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும்.இதன் மூலம் லட்சக்கணக்கான விதைகள் பரவி மரங்கள் தானாகவே வளர வாய்ப்பு உள்ளது.
இம்மரத்தை சுவரில் இருந்து மூன்று அடிகள் தள்ளி நடலாம்.
*நெட்டிலிங்கம் மரம்*
(Polyalthia longifolia)
இம்மரம் ஓங்கி உயரமாக வளர்ந்து காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டும் தன்மையுடைய அழகு தரும் மரம் (Ornamental tree)ஆகும்
இம்மரம் சாலை ஓரங்களின் இருபக்கங்களிலும் சுவர் ஓரங்களிலும் நட்டு வளர்க்கலாம்.பெரிய அளவில் கிளை பரப்பி வளராது.
சிலர் இதை அசோகம் மரம் என்றும் அழைப்பர்.ஆனால் அசோகம் மரம்(Saraca indica) வேறு நெட்டிலிங்கம் வேறு.இம்மரம் தமிழில் அசூத்தி மரம் என்று அழைக்கப்படுகிறது.இதன் இலைகளை விழாக்காலங்களில் தோரணம் கட்டவும்,பந்தல் கால்களில் கட்டவும் பயன்படுத்துவர்.
இம்மரத்தை சுவரில் இருந்து இரண்டு அடி தள்ளி நட்டு வளர்க்கலாம்.
*மரங்களை வளர்ப்போம்! மாசில்லா உலகம் படைப்போம்!*
Comments
Post a Comment