இயற்கை கரைசல்கள்
*மோர் கரைசல் (Butter Milk Solution)*
*1. அரப்பு மோர் கரைசல்*
இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே.
அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
*தேவையான பொருட்கள்*
அரப்பு இலைத்தூள் – 1 லிட்டர்
இளநீர் -1 லிட்டர்
புளித்த மோர் -5 லிட்டர்
*செய்முறை*
அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் 1 லிட்டர் இளநீர், 5 லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும்.
பின்னர் இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும்.
பிறகு 10 லிட்டர் நீரில் 200 மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம்.
*பயன்கள்*
இது பயிர்களை வளர்க்கிறது.
பூச்சிகளை விரட்டுகிறது.
பூசண நோயைத் தாங்கி வளர்கிறது.
இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியின் திறன் உள்ளது.
*ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்.*
குறைந்த செலவில் பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.
அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
*2. தேமோர் கரைசல்*
*தேவையான பொருட்கள்*
புளித்த மோர் -5 லிட்டர்
இளநீர் -1 லிட்டர்
10 தேங்காய்களின் துருவல்,
அழுகிய பழங்கள் 10 கிலோ,
ஒரு கலன்.
*செய்முறை*
முதலில் புளித்த மோர் மற்றும் இளநீரை ஒரு கலனில் ஊற்றி கொல்லவும்.
பின்னர் தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் இவற்றை ஒரு சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி கலனில் போடவும்.
7-ம் நாளில் ஊறல் கரைசல் தயாராகிவிடும்.
1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் ½ லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.
நன்றி : பசுமைதமிழகம்.
Comments
Post a Comment