Skip to main content

ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி பிறப்பிடம் தமிழகத்தில் மதுரை என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?

இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி?

இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை". மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்?

அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.

சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.

"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,
யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை"

என இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியை பற்றி. யானை மெதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம்.

கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம்.

நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்து கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.

ஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது.?
உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தை தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.

நம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்கு சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனை யில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்த பரம்பரையில் மாறிவிட்டது நம் அவலநிலை.

சிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. விலை 80ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கமிஷன் பெருமளவில் செல்கிறது.

மனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40வருடங்கள் என 40x3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் என தானாகவே "வடக்கிருந்து"(தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர் துறத்தல்) உயிர்விட்டவர்கள் ஏராளம். அவர்களே இன்று நம் குலதெய்வங்களாக பலரால் வணங்கப்படுகிறது. ஆய்வு செய்து பாருங்கள் பேச்சியம்மா, ஆண்டியப்பன், பெரியகருப்பன், அங்கம்மா, இப்படிப்பட்ட குலதெய்வங்கள் சாஸ்த்திரத்தில் இலக்கியங்களில் இல்லை. பிறகு எப்படி குல தெய்வங்கள் ஆனார்கள்? நம் குலத்தை சிறப்பாக வழிநடத்திய வாழவைத்த முன்னோர்கள் அவர்கள்.

பாரம்பரியம் அறிவோம்!
புராதான உணவுகளை உண்போம்!
வாழ்வதற்காக உண்!
உண்பதற்காக வாழாதே!
உங்கள் பிள்ளைகளுக்கு ஏ பி சி டி யை விட நம் பாரம்பரியத்தை முதலில் அறியச்செய்யுங்கள்.
சரித்திரங்களை விதையுங்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியாரை உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி அஸைன்மென்ட் காக மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள். "மகனே/மகளே, அவர்களெல்லாம் சில தலைமுறைகளுக்கு முந்தையவர்கள் தான். அவர்கள் வாழ்ந்த அதே ஊர்களில் தான் நாமும் இருக்கிறோம். அவர்களுக்கு இருந்த அதே வீரமும், திறமையும் நமக்குள்ளும் இருக்கிறது மறவாதே! " அவர்கள் உண்ட உணவு இதுதான், வாழ்க்கைமுறை இதுதான் என இயற்கையையும், தன்னம்பிக்கையையும், வீரத்தையும் பிள்ளைகள் மனதில் விதையுங்கள். நிச்சயம் பழைமை திரும்பும். மனிதன் 120 வருடங்கள் மீண்டும் ஆரோக்கியத்துடன் வாழ்வான்.

Comments

Popular posts from this blog

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள். 👉வேப்பமரம். 15' × 15' 👉பனைமரம். 10' × 10' 👉தேக்கு மரம். 10' × 10' 👉மலைவேம்பு மரம். 10' × 10' 👉சந்தன மரம். 15' × 15' 👉வாழை மரம். 8' × 8' 👉தென்னை மரம். 24' × 24' 👉பப்பாளி மரம். 7' × 7' 👉மாமரம் உயர் ரகம். 30' × 30' 👉மாமரம் சிறிய ரகம். 15' × 15' 👉பலா மரம். 22' × 22' 👉கொய்யா மரம்‌. 14' × 14' 👉மாதுளை மரம். 9' × 9' 👉சப்போட்டா மரம். 24' × 24' 👉முந்திரிகை மரம். 14' × 14' 👉முருங்கை மரம். 12' × 12' 👉நாவல் மரம். 30' × 30' இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.  தென்னைக்கு தேரோட.. வாழைக்கு வண்டியோட... கரும்புக்கு ஏரோட.... நெல்லுக்கு நண்டோட.....! என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள். #இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்! இவ்வாறு இடைவெளி இருந்த...

சனிப்பெயர்ச்சி

அன்புள்ள சனீசுவரனார்க்கு...  எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஜனவரி 17 அன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.  புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.  உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.  உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.  புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.  நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.  இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.  அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.  ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.  வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.  அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்...

வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா ?

*வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா* ? வெந்தயக் கீரை நம்மை விட வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா , கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தை குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடூவதால் சீரண சக்தியை அதிகரிக்கும். . பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.காசநோய் கூட குணமாகும். பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில்நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். உடலுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்கும் உணவாக வெந்தயக் கீரை இருக்கிறது. இது சற்று கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை பலரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் கேட்டால் உங்கள் உணவில் க...