நீரின் வகைகள்
1.மழைநீர்,
2.ஆலங்கட்டிநீர்,
3.பனிநீர்,
4.ஆற்றுநீர்,
5.ஊற்றுநீர்,
6.பாறைநீர்,
7.அருவிநீர்,
8.அடவிநீர்,
9.வயல்நீர்,
10.நண்டுக்குழிநீர்,
11.குளத்துநீர்,
12.ஏரிநீர்,
13.சுனைநீர்,
14.ஓடைநீர்,
15.கிணற்றுநீர்,
16.உப்புநீர்,
17.சமுத்திரநீர்,
18.இளநீர்
என தண்ணீரை 18 வகையா 'பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் தெளிவுபடுத்திச் சொல்லி வெச்சிருக்காரு _'தேரையர் சித்தர் '._*
*இந்த 18 வகையான நீரோட குணத்தை காண்போம்:*
*1. மழைநீர்.*
*_"சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட_*
*_போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு_*
*_விந்தும் வளர்ந்துவரு மேதினியி_* *_லெவ்வுயிர்க்குஞ்_*
*_சிந்துமழை நீராற் றெளி"_*
*அதாவது, மழை நீர் தான் உலகத்துல இருக்கிற தண்ணியிலேயே உயர்ந்தது. பூமியில வாழற எல்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உயிர்ச்சத்து மழை நீர்ல அடங்கியிருக்கு.*
*இதைத் தொடர்ந்து குடிச்சு வந்தா அறிவு விருத்தியாகும், உடல் சூடு நீங்கும்னு தேரையர் சொல்லியிருக்காரு. இந்தத் தண்ணியைத்தான், முதல் நீராவும் தொகுத்திருக்கார்.*
*2. ஆலங்கட்டிநீர்.*
*சில சமயம், மழை பெய்யும்போது, வானத்துல இருந்து பனிக்கட்டிங்க விழும். இந்த ஆலங்கட்டி நீரை, சேமிச்சு வெச்சு குடிச்சா மேகம், பெரும்பாடு, கண்மாசி, காந்தல், விக்கல், சுவாச நோய்கள், மெய்மயக்கம் எல்லாம் நீங்கும்.*
*3. பனிநீர்.*
*அதிகாலை நேரத்துல, வெட்டவெளியில பாத்திரத்தை வெச்சா அதுல நீர் சேகரமாகியிருக்கும்.* *இதுதான் பனிநீர்.*
*இதைத் தொடர்ந்து குடிச்சா. சொறி, சிரங்கு, குஷ்டம், தாபம், சயம், வாய்வு, முத்தோஷம், நீரிழிவு (சர்க்கரை நோய்தாங்க), அழல் கிராணி இப்படி பல நோய்ங்க காணாமப் போகும்.*
*இந்தப் பனிநீரை உடனே குடிக்கணும். காலம் தாழ்த்தி குடிச்சா, மருந்தா வேலை செய்யாம பக்கவிளைவு வந்துடும். சர்க்கரை நோய்க்கு ஆயிரக்கணக்குல மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடறவங்க, பைசா செலவில்லாம கிடைக்குற பனிநீரையும் கவனிக்கலாம்.*
*4. ஆற்றுநீர்.*
*ஆத்துத் தண்ணியில குளிச்சுட்டு வந்தா உடம்புக்குப் புதுதெம்பு வந்த மாதிரி உணரலாம். அதுக்குக் காரணம்,* *மலைப்பகுதியில இருந்து ஓடி வரும்போது, பல மூலிகைங்க மேல பட்டு அந்தத் தண்ணி ஓடிவரும். 'தம்பி, ஒவ்வொரு ஆத்துத் தண்ணிக்கும்,* *ஒவ்வொரு வித குணம் உண்டுப்பா’னு சொல்லிட்டு, 'தினமும் ஆத்து நீரை குடிச்சா, குளிச்சா வாதம், அனல், கபம், தாகம் நீங்கும்.*
*பொதுவா, நோய்க்கு வரவு சொல்லிக் கூப்பிடறது இந்த நாலு விஷயம்தான்’னு சொல்றாரு தேரையர். நம்ம முன்னோருங்க நோய் நொடியில்லாம, வாழ்ந்ததுக்கு ஆத்து நீரும்கூட ஒரு காரணமா இருந்திருக்கலாம்.*
*5. ஊற்றுநீர்.*
*ஊத்துத் தண்ணியைக் குடிச்சா, பித்தமும் தாகமும் நீங்கும்.*
*6. பாறைநீர்*
*இதை பாறைநீர், சுக்கான்பாறைநீர், கரும்பாறைநீர்னு மூணு வகையா பிரிக்கிறார்.*
*இதுல சாதாரண பாறைநீரைக் குடிச்சா வாதம், கோபம், சுரம் உண்டாகும்.*
*சுக்கான் பாறைநீர் குடிச்சா நீர்க்கடுப்பு, நெஞ்சில் சீழ்க்கட்டுனு பலபிணிகளும், பித்தமும் வந்து சேரும்.*
*கடைசியா இருக்கிற கரும்பாறை நீர்தான் நல்லது. இந்த நீரைத் தொடர்ந்து குடிக்கும்போது வாந்தி, பெரும்பாடு, பித்தசுரம், மயக்கம், நீர்க்கடுப்பு, தாகம் எல்லாம் தீரும், உடலும் பளபளப்பாகும்.*
*7. அருவிநீர்.*
*மேகம், ரத்தபித்தத்தையெல்லாம் நீக்கி, உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.*
*8. அடவிநீர்.*
*காட்டுப்பகுதியில் தேங்கிக் கிடக்குற இந்த நீரைக் குடிச்சா, ஜலதோஷம், உடல் கனப்பு, இளைப்பு, தலைபாரம், சுரம் உண்டாகும்.*
*9. வயல்நீர்*
*மேகம், தாகம், வெட்டை, சுரம், கோபத்தை போக்கும். அத்தோட உடலுக்குக் குளிர்ச்சியையும் கொடுக்கும்.*
*10. நண்டுக்குழிநீர்.*
*வாந்தி, தாகம், மாறாத விக்கல், காந்தல், தேக எரிச்சல் உள்ளவங்க, நண்டுக் குழிநீரைத் தேடித்தேடி குடிங்கனு தேரையர் சொல்றாரு.*
*11. குளத்துநீர்*
*குளத்துல வாழுற நீர்த் தாவரங்களைப் பொறுத்து, அந்த நீரோட குண இயல்புகள் மாறுபடும்.*
*தாமரை அதிகமா வளர்ந்திருக்கும் குளத்து நீரைக் குடிக்கிறவங்களுக்கு வாதம், பித்தம், வெக்கைநோய், தாகம் ஆகியவை உணடாகும்.*
*அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீர் அக்கினி, மந்தபேதி, சொறிசிரங்கு, வெப்பு உண்டாகும்.*
*12. ஏரிநீர்*
*இந்த நீர், வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்கும்.*
*13. சுனைநீர்*
*கல்லுங்க நிறைஞ்ச சுனைநீர், வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்கும். ஆனா, இந்த சுனைநீரை ஒருநாள் வெச்சிருந்து குடிச்சா, எந்தக் கெடுதலும் செய்யாது.*
*14. ஓடைநீர்*
*இதையும் சுவை அடிப்படையில ரெண்டு வகையா பிரிச்சிருக்காரு. ஒண்ணு துவர்ப்புச் சுவைநீர், ரெண்டாவது, இனிப்புநீர். இந்த இருவகையில் எதைக் குடிச்சாலும், தாகம் ஏற்படும். அதே நேரத்துல உடம்புக்கு பலமும் உண்டாகும்.*
*15. கிணற்றுநீர்*
*நிலவளத்தைப் பொறுத்து கிணற்றுநீரை ரெண்டு வகையா, பிரிக்கலாம். உவர்நீர் கிணறு, நன்னீர் கிணறு. இதுல ரெண்டு வகை நீரைக் குடிச்சாலும் தாகம், சூலை, சூடு நீங்கி, உடம்புக்கு வலு உண்டாகும்.இத்தோட சிலேத்துமம், வாதம், மயக்கம், சோபை, பித்தமும் நீங்கும்.*
*16. உப்புநீர்*
*இதைக் குடிச்சா, குடல்வாதம் மறையும். அதேசமயம், நெஞ்செரிச்சல், பித்தம் உண்டாகும்.*
*17. சமுத்திரநீர்*
*கடல் நீரைக் காய்ச்சி குடிச்சா, தொழு நோய், உடல் கடுப்பு, குஷ்டம், நடுக்கு வாதம், பல்லிடுக்கு ரத்தம் கசிதல் நீங்கும்.*
*18. இளநீர்.*
*இதைக் குடிச்சா வாதம், பித்தம், அனல், கபம், வாந்தி, பேதி, நீரடைப்பு நீங்கும். இத்தோட, மனதில் புத்துணர்ச்சி, பார்வையில தெளிவும், உடம்புக்குக் குளிர்ச்சியும் உருவாகும்.*
*எக்காரணம் கொண்டும், வெறும் வயித்துல இளநீரைக் குடிக்கக்கூடாது. குடிச்சா, வயிறு புண்ணாகிடும்.*
Er. சுல்தான். சித்த வைத்திய நிபுணர்.
Comments
Post a Comment