Skip to main content

நிலத்தடி நீருக்கும் கட்டணம்.

*நிலத்தடி நீருக்கும் கட்டணம்.*

செய்தி : வரும் ஆண்டு 2019, ஜுன் முதல் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
விவசாயம் தவிர்த்து வீடு, தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஆழ்துளை கிணறுகள் மூலம்  1 அங்குலம் விட்டம் குழாயில் ,20 கனமீட்டர் வரை எடுப்பவர்களுக்கு 1 கனமீட்டர் தண்ணீருக்கு 2 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும் ,என மத்தியஅரசு அறிவித்துள்ளது.

தண்ணீர், காற்று இவை இரண்டும் உயிரின் மூலாதாரங்கள்.
முப்பது வருடங்களுக்கு முன்னர், குடிதண்ணீரை காசுக்கு விற்க்கிறார்கள் என்று கூறினால், தண்ணீருக்கு பணமா? என வியந்திருப்போம், அதெல்லாம் சாத்தியமில்லை என வாதாடியிருப்போம்.ஏனெனில் தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவன் பாவி என்றுரைத்தனர் மானுடர்கள். ஆனால் இன்றைய நிலைமை, வெளி இடங்களில் குடிக்க தண்ணீர் வேண்டுமெனில், அதை பணம் கொடுத்து தான் வாங்கி பருக வேண்டும்.
பெரும்பாலான பெருநிறுவனங்கள் நடத்தும் சங்கிலி தொடர் உணவகங்களில், தண்ணீரே வைப்பதில்லை என்பது தான் நடைமுறை.
தாகம் என்றால் குளிர்பனங்களையோ அல்லது தண்ணீர் பாட்டில்களையோ தான் பணம் கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும்.
சாப்பாடு போடும் முன் குவளையில் தண்ணீர் வைப்பது விருந்தோம்பலின் அடிப்படை மரபு. அதையும் விடுத்து, உணவு விற்கப்படுகிறது, மரபு தெரியாதவனிடம் நாமும் வரிசையில் நின்று பணம் கொடுத்து,உணவை வாங்கி உண்டு வருகிறோம்.

நான்கு மாதங்ளுக்கு முன்னர், ஓர் காணொளியை கண்டேன், அதல் சிறுவாணி ஆற்று தண்ணீரை கோவை மக்களுக்கு வழங்கும் பணியை சூயஸ் என்கின்ற நிறுவனம் மேற்கொள்ள போவதாக செய்தி அதை மேற்கோள் காட்டி, இனி நாம், நம் வீடுகளில், நம் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் எடுக்கும் தண்ணீருக்கும் கட்டணம், விவசாயம், தொழிற்சாலை மற்றும் ஆறு, வாய்கால்களில் எடுக்கப்படும் தண்ணீருக்கும் கட்டணம், ஏன் மழை தண்ணீரை கூட சேமிக்க கூடாதென்ற கடுமையான சட்டங்களும் கொண்டு வரப்படும் என நீண்டு விரிவுரைக்கிறது அக்காணொளி.
அக்காணொளியை பார்த்து அதிர்ந்து போனாலும், ஒரு சமயம் இது நடக்க வாய்ப்புள்ளது எனவும் தோன்றியது. இருப்பினும், இது போன்று நிலத்தடி நீருக்கு கட்டணம் என்றால் பெரும் எதிர்ப்பு மக்களிடையே உருவாகும், ஆகையால் இதை எந்த அரசு நிர்வாகமும் நடைமுறைப்படுத்த அஞ்சும் என எண்ணிணேன்.

இன்றைய செய்தி, இந்தியாவில் எதுவும் சாத்தியம் என்பதை உணர்த்தியது.
1997 ஆம் ஆண்டு நடைபெற்ற  பொலிவியாவின் தண்ணீர் போரை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம்....

தண்ணீருக்கு கட்டணம் செலுத்தி, நாளைடைவில் ஒரு சொட்டு நீருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்நோக்கியிருக்கும் காலங்களை சகிக்க முடியாமல், பெரும் மக்கள் புரட்சி பொலிவியாவில் வெடித்து, தண்ணீருக்காக பல உயிர்கள் அரசின் துப்பாக்கி சூட்டில் செத்து மடிந்தன.இந்த நிலை வரும்காலத்தில் நம்நாட்டிலுமா???

நிலத்தடிநீருக்கு கட்டணம் என்பதற்கு நாம் தேர்ந்தெடுத்த அரசு சொல்லும் காரணம், நிலத்தடி நீரை உறிஞ்சுவதில், மொத்த  உலகநாடுகளின் பங்களிப்பில், 25 சதவிகிதம் இந்தியாவின் பங்கு உள்ளது என ஐக்கியநாடுகளின் அமைப்பு எடுத்துரைக்கிறது.
இந்த அளவில் சென்றால், வரும்காலத்தில் நிலத்தடி நீரே காணாமல் போகும் என அபாய எச்சரிக்கை தந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதிகளின் இந்த அறிவிப்பு, நிலத்தடி நீருக்கும் கட்டணம் என..

*மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தாத அரசு, நிலத்தடி நீர்பயன்பாட்டை குறைக்க, கட்டணம்* *வசூலிக்க ஆயத்தமாகி வருகிறது.*

▪நிலத்தடி நீர்மட்டத்தை காக்க, மழைநீர் சேகரிப்பு இல்லா கட்டிட அமைப்புகளின் உரிமத்தை ரத்து செய்திருக்க வேண்டும்.
▪அனைத்து கிராமம், ஊராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு, சரியான மழைநீர் சேகர அமைப்புகளை உருவாக்கி பராமரித்திருக்க வேண்டும்.
▪ஓடை, கால்வாய், ஆறுகளில் சட்ட விரோதமாக கழிவுநீரை கொண்டு வந்து கலக்கும் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்து, மூட செய்திருக்க வேண்டும்.
▪ராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலம், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்யும் குடிதண்ணீர், குளிர்பான தொழிற்சாலைகளை மூடியிருக்க வேண்டும்.
▪தொழில் வளர்ச்சி என்ற பெயரால் பின்னலாடை, தோல் பதனிடுதல், கார் கம்பெனிகள், உர தொழிற்சாலைகள் என பெரும் தொழிற்பேட்டைகளை உருவாக்கி, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல், இந்நிறுவனங்களுக்கு நிபந்தனையில்லா தண்ணீர், மின்சாரம், நிலம் என வாரி, வாரி நம் மண்ணின் அடிப்படை வாழ்வதாரங்களை அள்ளி இறைத்திருக்க கூடாது.

வளர்ந்தநாடுகளுக்கு பனியனும், காரும், செருப்பும், ஜீன்ஸ் பேண்டையும் உற்பத்தி செய்ய தெரியாதா?
இந்த தொழில் நுட்பங்களை அறிந்த அறிவாளிகள், நாம் மட்டும் தானா?
சிந்திப்பீர், இது *மறைநீர்* *கோட்பாடு.*

தொழில் வளர்ச்சி என்று, எதையெல்லாம், நம் மண்ணில் விதைக்கிறோமோ அவையெல்லாம் அம்மண்ணின் நிலம், நீர், காற்றை நிர்மூலமாக்கும் என்பதை வளர்ந்த நாடுகள் அறிந்து வைத்துள்ளன. ஆகையால் அவர்களின் ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க, நம் நாட்டை போன்ற வளரும் நாடுகளை பயன்படுத்தி கொண்டு, அவர்களுடைய இயற்கை வளங்களை பேணி, போற்றி வருகின்றனர்.

இந்தியா ஏழை, விவசாய நாடு என்பது தான், 30.ஆண்டுகளுக்கு முன்னர் நம் அடையாளம். ஆனால் தற்போது இந்தியா வளரும் நாடு,உலகின் பணக்கார பட்டியலில் இந்தியர்களும் உள்ளனர். ஆகையால் இயற்கை வளத்தை சுரண்டி, மண்ணை அழித்தொழிக்கும் திட்டங்கள் எதுவாயினும், அது தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நம் இந்திய மண்ணில் அடிக்கல் நாட்டப்பட்டு, பெருவளர்ச்சி காணும் இது தான் இன்றைய ஒளிரும் இந்தியா.

வளர்ந்த நாடுகள், இது போன்ற தொழில் வளர்ச்சிகளை அவர்கள் மண்ணில் அனுமதிக்காது, விவசாயத்தை, அதிலும் இயற்கை விவசாயத்தை பெருவாரியாக செயல்படுத்தி வருகின்றது.
விவசாயிகளுக்கு,அரசே நிலத்தை குத்தகைக்கு அளித்து, விவசாயம் மேற்கொள்ள அனைத்து வழிமுறைகளையும் எளிதாக்கி, உழவை ஊக்கப்படுத்துகின்றது.

நாம் அறிவாளிகள்!! தொழில் வளர்ச்சி என்ற பெயரில், நம் இயற்கை வளங்களை நாமே சுரண்டி,நம்மை வறியவராக்கி கொண்டு வருகின்றோம்.

இயற்கையே, இந்த இந்திய கண்டத்தில் விவசாயம் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டுமென, எந்நாட்டிற்க்கும் கிடைத்தற்க்கரிய 12 மணி நேர பகல் 12 மணி நேர இரவு, சரியான காலநிலைகளில் தவறாது பெய்யும் பருவமழை,விதைத்ததை, விளைச்சலாக்கி தரும் அற்புதமான மண்கண்டம் என உழவுக்கென, நம் இந்திய கண்டத்தை உருவாக்கி உள்ளது.
உணவு படைத்திடும் உழவன் தான், உயிர்கள் அனைத்திலும் உயர்வானவன் என்பதை நம் மரபினர் அறிந்து வைத்திருந்தனர்.

இன்றைய கொடுமை, உணவு படைத்திடும்,எம்மண் அனைத்திலும், கட்டிடடங்களும், தொழிற்சாலைகளும் பரந்து விரிந்து கிடக்கின்றன.

ஏ! என் உழவனே, உயிர் வளர்க்க உணவு சமைத்திடும், உன் மண்ணில், கல்லையும், மண்ணையும் கொட்டி, கான்கிரீட் காடாக அவதானிக்க, உன் வயலை தாரை வார்க்க எப்படியடா மனம் வந்தது....
பொருள்,பணம் என அலைந்தாய்,  தங்கவயலாய் இருந்த உன் மண்ணை விற்று, இன்று குடிக்கும் தண்ணீருக்கும் கட்டணம் அழும் காலம் வந்துவிட்டதடா.....

நிலத்தடி நீருக்கான கட்டணத்தில் விவசாயத்திற்கு விலக்கு தற்போது..
ஆனால், வருங்காலத்தில் பொலிவியாவின் தண்ணீர்  போர் போல் இந்தியாவிலும் வெடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை....

நகரமக்களுக்கு, இது ஓர் செய்தி, அவர்கள் கட்டணம் கட்ட தயாராய் உள்ளனர் என்பதை உணர்த்தியது,இன்றைய  தனியார் பண்பலையின் மக்கள் கருத்துக்களை பகிரும் நிகழ்ச்சி.
ஆனால், விவசாயிகளான நமக்கு, இச்செய்தி நம் மண்ணின் விவசாயத்தை முற்றிலுமாக, நம்மை கைவிட செய்யும் பணிக்கான, அறிவிப்பு.

உழவனே,
உழவு நம் உரிமை, நம் பாரம்பரியம், நம் அடையாளம்.
ஊக்கமது கைவிடேல் என்றுரைத்த ஔவை பாட்டி, தற்போது உழவை கைவிடேல் என திருத்தியிருப்பாள் ஆத்திசூடியை...

உழவா, உன் அடையாளத்தை ஒருபோதும் கைவிடாதே....
அனைத்தும் நஞ்சாகி போன தற்காலத்தில், இயற்கை விளைபொருள் ஒன்றே விலை மதிப்பில்லாதது.
வரும்காலத்தில், உழவன் மட்டுமே உலகின் பெரும் பணக்காரன்.

*இன்று நிலத்தடி நீருக்கு கட்டணம் விதித்து, விவசாயத்தை கருக்கி,பரம்பரை* *உழவர்களை அவர்பணியை கைவிட செய்து, வரும் காலத்தில் அப்பணியை* *கார்ப்பரேட்டுகள் கையில் எடுக்கும், எம் மண்ணின் உழவனை அடிமை* *கூலிகளாய் அமர்த்தும், அம்மண்ணில் உழவு செய்திட..*

செய்தி : நிலத்தடி நீருக்கு கட்டணம் மத்திய அரசு அறிவிப்பு.

*வளமான வருங்காலம், நம் பிள்ளைகளுக்கு உண்டா??*
விடைதெரியா கேள்விகளுடன்
உழத்தி. செல்விஜெய்குமார்.
அர்வின் ஃபார்ம்ஸ்.

Comments

Popular posts from this blog

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள். 👉வேப்பமரம். 15' × 15' 👉பனைமரம். 10' × 10' 👉தேக்கு மரம். 10' × 10' 👉மலைவேம்பு மரம். 10' × 10' 👉சந்தன மரம். 15' × 15' 👉வாழை மரம். 8' × 8' 👉தென்னை மரம். 24' × 24' 👉பப்பாளி மரம். 7' × 7' 👉மாமரம் உயர் ரகம். 30' × 30' 👉மாமரம் சிறிய ரகம். 15' × 15' 👉பலா மரம். 22' × 22' 👉கொய்யா மரம்‌. 14' × 14' 👉மாதுளை மரம். 9' × 9' 👉சப்போட்டா மரம். 24' × 24' 👉முந்திரிகை மரம். 14' × 14' 👉முருங்கை மரம். 12' × 12' 👉நாவல் மரம். 30' × 30' இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.  தென்னைக்கு தேரோட.. வாழைக்கு வண்டியோட... கரும்புக்கு ஏரோட.... நெல்லுக்கு நண்டோட.....! என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள். #இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்! இவ்வாறு இடைவெளி இருந்த...

சனிப்பெயர்ச்சி

அன்புள்ள சனீசுவரனார்க்கு...  எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஜனவரி 17 அன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.  புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.  உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.  உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.  புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.  நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.  இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.  அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.  ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.  வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.  அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்...

வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா ?

*வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா* ? வெந்தயக் கீரை நம்மை விட வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா , கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தை குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடூவதால் சீரண சக்தியை அதிகரிக்கும். . பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.காசநோய் கூட குணமாகும். பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில்நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். உடலுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்கும் உணவாக வெந்தயக் கீரை இருக்கிறது. இது சற்று கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை பலரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் கேட்டால் உங்கள் உணவில் க...