Skip to main content

நெல் ஜெயராமன்

*நெல் செயராமன்..*

உலகில், உணவின் அடையாளம் நெல்.. அந்த *பாரம்பரிய நெல்லின் அடையாளம் ஐயா 'நெல் செயராமன்'..*

4000 த்திற்கிம் அதிகமான நெல் ரகங்களை தமிழ் மக்கள் இழந்த நிலையில் 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து உழவர்களுக்கு இலவசமாக விதை நெல் வழங்கி நாம் இழந்த்தை மீண்டும் நம் தமிழ் மண்ணுக்கு வழங்கினார்..

பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார்.

  மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.

*மாண்டது வெறும் உயிரல்ல , இந்த உலகமே அபகரிக்க துடிக்கும் நம் மண்ணின் வளத்தை, விவசாயத்தை தினம் தினம் பாதுகாத்த ஒரு விவசாயி  காலமானார்😥*

பாரம்பரிய நெல் வகைகளை காப்போம்... 🌾🙏🏽🌾🙏🏽🌾🙏🏽🌾🙏🏽🌾

*யார் இந்த நெல் ஜெயராமன்?*

நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாறு..!!

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் தீவிர விசுவாசியான நெல் ஜெயராமன் இன்று காலமானார்.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பயணம் செய்து 170 அபுர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். இவரின் சிறப்புகளையும் அவர் செய்த சேவைகளைப் பற்றியும் இங்கு காண்போம்.

*பிறப்பு :*

🌾 நெல் இரா.ஜெயராமன் அவர்கள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்புண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 15, 1968-ம் ஆண்டில் பிறந்தவர். இவர் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். திருத்துறைப்புண்டியில் தொழிலாளியாக வேலைச் செய்தார்.

*நம்மாழ்வாரின் தொண்டர் :*

🌾 நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ல் பும்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார்.

🌾 அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளைச் சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர்.

🌾 அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறு உற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

🌾 அன்றுமுதல் இன்று வரை அந்த பயணத்தை சிறப்பாக செய்தார்.

*விருதுகள் :*

🌾 இரா.ஜெயராமன் பணிகளுக்காக விஜய் தொலைக்காட்சியின் மாற்றம் தேவை நிகழ்ச்சியில் இவருக்கு இயற்கை விதை நெல் மீட்பாளர் விருதை வழங்கியது.

🌾 இவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலைக் கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும், இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிக் கவுரவித்துள்ளது.

*பெயர் காரணம்:*

🌾 நம்மாழ்வார், தான் கொடுத்த பணியை சிறப்பாகச் செய்ததால் ஜெயராமனாக இருந்த அவரது பெயரை நெல் ஜெயராமன் என பெயர் சுட்டினார்.

*நெல் வகைகள் :*

🌾 1,000 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

🌾 கடந்த 50 ஆண்டுகளில் தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சுழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

🌾 இந்த சுழலில் தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த நெல் ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பணியைத் தொடங்கினார்.

*பணிகள் :*

🌾 பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார். இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார்.

🌾 திருத்துறைப்புண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார்.

🌾 அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாரம்பரிய நெல் மையம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாக திகழ்கிறது.

Comments

Popular posts from this blog

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள். 👉வேப்பமரம். 15' × 15' 👉பனைமரம். 10' × 10' 👉தேக்கு மரம். 10' × 10' 👉மலைவேம்பு மரம். 10' × 10' 👉சந்தன மரம். 15' × 15' 👉வாழை மரம். 8' × 8' 👉தென்னை மரம். 24' × 24' 👉பப்பாளி மரம். 7' × 7' 👉மாமரம் உயர் ரகம். 30' × 30' 👉மாமரம் சிறிய ரகம். 15' × 15' 👉பலா மரம். 22' × 22' 👉கொய்யா மரம்‌. 14' × 14' 👉மாதுளை மரம். 9' × 9' 👉சப்போட்டா மரம். 24' × 24' 👉முந்திரிகை மரம். 14' × 14' 👉முருங்கை மரம். 12' × 12' 👉நாவல் மரம். 30' × 30' இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.  தென்னைக்கு தேரோட.. வாழைக்கு வண்டியோட... கரும்புக்கு ஏரோட.... நெல்லுக்கு நண்டோட.....! என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள். #இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்! இவ்வாறு இடைவெளி இருந்த...

சனிப்பெயர்ச்சி

அன்புள்ள சனீசுவரனார்க்கு...  எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஜனவரி 17 அன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.  புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.  உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.  உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.  புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.  நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.  இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.  அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.  ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.  வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.  அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்...

வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா ?

*வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா* ? வெந்தயக் கீரை நம்மை விட வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா , கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தை குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடூவதால் சீரண சக்தியை அதிகரிக்கும். . பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.காசநோய் கூட குணமாகும். பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில்நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். உடலுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்கும் உணவாக வெந்தயக் கீரை இருக்கிறது. இது சற்று கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை பலரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் கேட்டால் உங்கள் உணவில் க...